Kannan Varum Velai

Kannan Varum Velai

Yuvan Shankar Raja

Длительность: 3:54
Год: 2007
Скачать MP3

Текст песни

யே யே யே

கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்

கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே

கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்

வான்கோழி கொள்ளும் ஆசை
ஆடி தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை
கூடிப் பார்ப்பது

தேர் கால்கள் கொள்ளும் ஆசை
வீதி சேர்வது
ஓர் ஈசல் கொள்ளும் ஆசை
தீயில் வாழ்வது

கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு வீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை

கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்

யே யே யே யே

பூவாசம் தென்றலோடு சேர வேணுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே

நீண்டநாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே

கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்
அதை ஏற்க நின்றேன்

கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே

கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்
அதை ஏற்க நின்றேன்