Alaikadal (From "Ponniyin Selvan Part-1")

Alaikadal (From "Ponniyin Selvan Part-1")

A. R. Rahman

Длительность: 5:15
Год: 2022
Скачать MP3

Текст песни

ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ
அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ

பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ
ஆழியிலே தொடு மெதுவாக-ஏலோ-ஏலேலோ
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல-ஏலோ-ஏலேலோ

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ

இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும்
இரவுகள் பகலாகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீராகும்
வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்
வராதோ அருகாமை நம் பூமியில்
நான் ஒருமுறை வாழ்ந்திட, மறுகரை ஏறிட
பலபல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ

பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான ஓவியமா
தாய் இன்றி கருவான ஓர் உயிரா
ஆதாரம் இல்லாத காதலா
கனா இடைவெளியில் கரம் பிடிப்பாயா
கரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா
ஓர் பார்வை ஊர் பார்க்க தாராயோ

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ
அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ
பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ
ஆழியிலே தொடு மெதுவாக-ஏலோ-ஏலேலோ
வான் வெளியின் மின் ஒளியில் செல்ல-ஏலோ-ஏலேலோ