Mazhai Kuruvi (From "Chekka Chivantha Vaanam")

Mazhai Kuruvi (From "Chekka Chivantha Vaanam")

A.R. Rahman

Длительность: 5:49
Год: 2023
Скачать MP3

Текст песни

நீல மழை சாரல்
தென்றல் நெசவு நடத்தும் இடம்
நீல மழை சாரல்

வானம் குனிவதிலும்
மண்ணை தொடுவதிலும்
காதல் அறிந்திருந்தேன்

கானம் குறைந்துவரும்
மௌன திருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்துருந்தேன்
இதயம் எரித்திருந்தேன்
நான் இயற்கையில்
திளைத்திருந்தேன்

சிட்டு குருவி ஒன்று
சினேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல்
என்னை வா வா என்றது

கிச்சு கிச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

கிச்சு கிச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

ஒற்றை சிறு குருவி
நடத்தும் ஓரங்க நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்

கிச்சு கிச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

ஒரு நாள் கனவில் இது
பேரற்ற பேர் உறவோ
யார் வரவோ

நீ கண் தொட்டு
கடந்திடும் காற்றோ
இல்லை கனவில்
நான் கேட்க்கும் பாட்டோ
இது உறவோ இல்லை பரிவோ

நீல மழை சாரல்
னனன
னனன னா

அழகை அசைத்தபடி பறந்து
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறி விட்டு சற்றே
உயரே பறந்ததுவே

கிச்சு கிச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

கிச்சு கிச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

முகிலில் சர சர
சரவென்று கூட
இடி வந்து பட பட
படவென்று வீழ
மழை வந்து சட சட
சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு
குடயில்லை மூட

வானவெளி மண்ணில் நழுவி
விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து
தொலைந்ததென்ன

சிட்டு சிறுகுருவி
பரந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன்
பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்

விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயரப்படுமோ
துயரப்படுமோ
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வலித்திடுமோ
வலித்திடுமோ

காற்றில் அந்நேரம்
கதையே வேறு கதை
கூட்டை மறந்துவிட்டு
குருவி கும்மியடித்து கான்

சொட்டும் மழை சிந்தும்
அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டி போனவனை
எண்ணி எண்ணி அழுதது
கான் அழுதது அழுதது கான்

காற்றில் அந்நேரம்
கதையே வேறு கதை
கூட்டை மறந்துவிட்டு
குருவி கும்மியடித்து கான்

சொட்டும் மழை சிந்தும்
அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டு போனவனை
எண்ணி எண்ணி
அழுதது கான் அழுதது கான்