Nenjukkule

Nenjukkule

A.R. Rahman

Альбом: Nenjukkule
Длительность: 4:49
Год: 2012
Скачать MP3

Текст песни

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு

அப்ப நிமிந்தவதான் அப்பறமா
குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

பச்சி ஒறங்கிருச்சு
பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு… ஏ… ஏ

காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலையே… ஏ… ஏ

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

ஏ..நானே...நானே நானே நானே

ஒரு வாய் எறங்கலையே
உள் நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே

ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே… ஓ

ஓ… நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு

அப்ப நிமிந்தவதான் அப்பறமா
குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ