Girlfriend

Girlfriend

A.R. Rahman, Pa. Vijay, Karthik, Timmy, And Tippu

Длительность: 5:06
Год: 2003
Скачать MP3

Текст песни

இன்றே இன்றே
இன்றே வேணும் வேணும்
இன்றே இன்றே
இன்றே

பால்போலே பதினாறில்
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட்
வேணும் இன்று புதிதாக
அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணும்

இணைய தளத்தில்
கணினி களத்தில் மின் அஞ்சல்
அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில்
நனைந்தால் முகத்தை முகத்தால்
துடைக்கணுமே

எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா

கேர்ள் ஃபிரண்ட் தானே
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் இல்லா
வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் வேணும்
வேணும்

பால்போலே பதினாறில்
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட்
வேணும் இன்று புதிதாக
அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணும்

ஃபிரண்ட்ஸோட
கவிதைகள் வாங்கி
என்னோட கவிதைன்னு
சொல்லி இதயத்தில்
இடமொன்று பிடிக்கத்தான்

ஓடாத சினிமாக்கு
ஓடி சரியான கார்னர் சீட்
தேடி பபுள் கம்மை இதழ்
மாற்றி கொள்ளத்தான்

செல் போன் பில்
ஏற ஜோக்கால் தினம்
கடிக்க எஸ்.எம்.எஸ்
அனுப்ப தேவை கேர்ள்
ஃபிரண்ட் தான்

காலார நடை போட
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட்
வேணும் காலம் தெரியாமல்
கடலை நான் போட எனக்கொரு
கேர்ள் ஃபிரண்ட் வேணும்

நிலவின் நகலாய்
அறைக்குள் மழையாய்
எலுமிச்சை மணமாய்
இருக்கணுமே

இன்னொரு நிழலாய்
இரவல் உயிராய் இருபது
விரலாய் இருக்கணுமே

எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா

க க கேர்ள் ஃபிரண்ட் தானே
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் இல்லா
வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் வேணும்
வேணும் வேணும் வேணும்

பைக் ஏறி ஊர் சுற்ற
செல்ல ஆ ஊன்னா ட்ரீட்
ஒன்று வைக்க முனுக்குன்னா
க்ரீட்டிங் கார்ட் கொடுக்கத்தான்

ஹச் என்றால் கர்சீப்
நீட்ட இச் என்றால் இடக்கன்னம்
காட்ட நச் என்றால் தலை மீது
கொட்டத்தான்

பார்த்தால் பல்ப்
எறிய பார்பி டால் போல
போனி டேலோடு தேவை
கேர்ள் ஃபிரண்ட் தான்

க க கேர்ள் ஃபிரண்ட் தானே
பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கேர்ள் ஃபிரண்ட் இல்லா
வாழ்க்கை வேஸ்ட் அல்லவா

எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கேர்ள்
ஃபிரண்ட் வேணுமடா