Siru Thoduthalilae

Siru Thoduthalilae

Dharan Kumar

Длительность: 4:52
Год: 2008
Скачать MP3

Текст песни

சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்
சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்
நான் கேட்க

இது வரையிலும் நான் எண்ணவில்லையே
இனிமையை வாங்க
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்

எனக்கே என்னை தெரியாமல்
இருந்தேன் அன்பே எதற்காக
சிரிப்பால் உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே

நான் உனக்கென இருப்பது தெரியாதா
எதை நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே

ஒரு முறை காதல் இரு முறை மோதல்
பல முறை சாதல் வாழ்க்கையிலே

ஒரு முறை கூடல் பல முறை தேடல்
நெருக்கத்திலே

ஒரு முறை காதல் இரு முறை மோதல்
பல முறை சாதல் வாழ்க்கையிலே

ஓஹூஹூ

அலையே இல்லா கடல் போல
இருந்தேன் அன்பே எதற்காக
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே
கிழக்காய் உதித்தாய் உடைந்தேனே

மழையே இல்லா நிலம் போல
பொறுத்தேன் அன்பே உனக்காக
கொடுத்தாய் உன்னை நீ முழுதாக
எடுத்தாய் எனையும் அழகாக

எது வரை நீயோ அது வரை நானோ
இது வரை ஆசை காதலிலே

எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே

எது வரை நீயோ அது வரை நானோ
இது வரை ஆசை காதலிலே

ஓஹூஹூ  ஆஹ்

சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்
சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்
நான் கேட்க

இது வரையிலும் நான் எண்ணவில்லையே
இனிமையை வாங்க
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே தேங்க