Oru Kili Oru Kili

Oru Kili Oru Kili

Satish Chakravarthy

Длительность: 5:42
Год: 2009
Скачать MP3

Текст песни

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

உனக்குள் நான் வாழும்
விவரம் நான் கண்டு
வியக்கிறேன் வியக்கிறேன்

எனக்கு நான் அல்ல
உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

விழியல்ல விரல் இது
ஓர் மடல் தான் வரைந்தது
உயிர் அல்ல உயில் இது
உனக்கு தான் உரியது

இமைகளின் இடையில் நீ
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்

காதல் தான் எந்நாளும் ஒரு
வார்த்தைக்குள் வராதது
காலங்கள் சென்றாலும்
அந்த வானம் போல் விழாதது

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

தூரத்து மேகத்தை
துரத்தி செல்லும் பறவை போலே
தொகையே உன்னையும் நான்
தேடியே வந்தேன் இங்கே

பொய்கை போல் கிடந்தவள்
பார்வை என்னும் கல் எறிந்தாய்
கலங்கினேன் உன் கையில்
வழங்கினேன் என்னை இன்றே

தோழியே உன் தேகம்
இளம் தென்றல் தான் தொடாததோ
தோழனே உன் கைகள் தொட
காலம் தான் விடததோ

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

உனக்குள் நான் வாழும்
விவரம் நான் கண்டு
வியக்கிறேன் வியக்கிறேன்

எனக்கு நான் அல்ல
உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்

ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி