Sollamaley
Dhilip Varman
5:18என்னுயிரே என்னைப் பிரிந்தவளே இளநெஞ்ச கீதமாகும் இசையே என்னவளே என்னில் நிறைந்தவளே இதமாக வீசும் தென்றல் நீயே தூரமாகப் போனதே காதல் மேகமே பாரமான என் மனம் உன்னைத் தேடுதே உன் பார்வை சொல்லும் நூறு ஆறுதல் தேடி வாழ்கிறேன் என்னுயிரே என்னைப் பிரிந்தவளே இளநெஞ்ச கீதமாகும் இசையே காதல் என்ற கவிதையை தந்த தேவதை காலமென்ற அருவியில் அன்றே மூழ்கியதோ கால் தடங்கள் தெரியுதே வந்த பாதையில் நீயிருந்த சுவடுகள் நெஞ்சில் மறைந்திடுமா வா எந்தன் காதலே வா இந்த நொடியிலே என்னில் வாழும் பெண்ணே கொஞ்சம் கண்ணில் தோன்ற வா என்னுயிரே என்னைப் பிரிந்தவளே இளநெஞ்ச கீதமாகும் இசையே ஈரமான இரவிலே உன்னைத் தேடினேன் தேன் உறைந்த உதடுகள் என்னை அடைந்திடுமா வெண்ணிலாவின் ஒளியிலே உன்னைத் தீண்டினேன் பூவாய் உந்தன் விரல்களே என்னைத் தழுவிடுமா ஏன் இந்த சூழ்நிலை ஏன் இந்த வேதனை என்னில் வாழும் பெண்ணே கொஞ்சம் கண்ணில் தோன்ற வா என்னுயிரே என்னைப் பிரிந்தவளே இளநெஞ்ச கீதமாகும் இசையே தூரமாகப் போனதே காதல் மேகமே பாரமான என் மனம் உன்னைத் தேடுதே உன் பார்வை சொல்லும் நூறு ஆறுதல் தேடி வாழ்கிறேன் என்னுயிரே என்னைப் பிரிந்தவளே இளநெஞ்ச கீதமாகும் இசையே