Un Vizhigalil

Un Vizhigalil

G.V. Prakash Kumar

Длительность: 5:05
Год: 2014
Скачать MP3

Текст песни

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்
உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்

ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால்
போர்க்களத்தை உணர்வேன் உயிரில்
என் ஆசை எல்லாம் சேர்த்து
ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே
நான் உனை பார்க்கிறேன் அன்பே
சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய்
உனக்கது தெரிந்ததா அன்பே

என் மனம் கானலின் நீர் என ஆகுமா
கைகளில் சேருமா அன்பே
நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா
நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே

பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே
பெண்களின் நெஞ்சம் தானடா
வண்ணத்து பூச்சியின் வண்ணங்கள் போலவே
ஆண்களின் நெஞ்சம் தானடா
வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும்

எண்ணங்கள் சேருமா அன்பே
வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே
இதழ்களும் உள்ளதே இங்கே
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்