Ennai Pada Vaitha

Ennai Pada Vaitha

Hariharan

Альбом: Punnagaidhesam
Длительность: 4:14
Год: 2025
Скачать MP3

Текст песни

என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்

என் தாகம் தீர உந்தன் பெயரை
சொல்லி சொல்லி பாடுகின்றேன்
இமைகள் பார்த்ததும் எதிரில் வேண்டும் உன் முகம்
எனது சுவாசம் உன்வாசம்

என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்

தாய் அன்று கொடுத்த முத்தங்கள் கூட
உன் கிள்ளல் போல சுகமாயில்லை
மூங்கிலில் பாடும் ராகத்தில் கூட
நீ திட்டும் அழகின் இதமே இல்லை

உன் பேச்சில் தெறிக்கும் எச்சில் துளி
மோட்சத்தை அடைய சொல்லும் வழி
நான் ஆலயம் சென்று பார்க்கிறேன்
அங்கு சாமி உன் சாயலில்

என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்

பூவுக்குள் வாசம் பொழுதானால் தீரும்
உன் வாசம் என்றும் தீராதம்மா
ஒலியரை யாவும் சிலநேரம் தூங்கும்
உன் நேசம் என்றும் நீங்காதம்மா

அன்பே நீ சிரித்தால் சிரிப்புகள்
என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்
உன்னை காணத்தான் கண்கள் வாங்கினேன்
உன்னை காண நெஞ்சம் துடிக்கின்றதே

என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்

என் தாகம் தீர உந்தன் பெயரை
சொல்லி சொல்லி பாடுகின்றேன்
இமைகள் பார்த்ததும எதிரில் வேண்டும் உன் முகம்
எனது சுவாசம் உன்வாசம்

என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்