Telephone Manipol
A. R. Rahman
6:16கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிதடா எப்பா அட எப்பா சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா எப்பா அட எப்பா இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும் அட பாவி நெஞ்சு துடிக்கும் இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே ஒரு மூங்கில் காடு வெடிக்கும் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் திரு மார்பு தித்திக்கும் கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிதடா சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும் இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும் எந்நாளும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும் இளமை வயதில் வாங்கி அணைக்கவும் முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும் எப்போதும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும் இவள் போலொரு மனைவியும் வாய்த்தால் மூப்பு நேராது ஹே... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் இவள் கூந்தல் மந்திரித்து வைத்தால் நோயும் வாராது உங்களுக்குன்னு பூத்த பூ வாடி போகாது நான் காணும் மாங்கல்யம் நிறம் மாறிப் போகாது கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிதடா சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா... கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும் கண்ணில் வைத்து காவல் காக்கவும் எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும் வாழ்க்கை முழுதும் புரிந்து நடக்கவும் வாரிசு தொடர குழந்தை கொடுக்கவும் எப்போதும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும் என் போலொரு ஆம்பள பார்த்தா பொண்ணு விட மாட்டா ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் முந்தானையில் முத்தம் தந்தா மூச்சு விட மாட்டா தாலி கட்டி கேட்டா கூட தானா தர மாட்டா அட தள்ளாடும் தாத்தாவுக்கும் என்னோட விளையாட்டா கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிதடா சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும் இந்த பாவி நெஞ்சு துடிக்கும் இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே ஒரு மூங்கில் காடு வெடிக்கும் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் திரு மார்பு தித்திக்கும் கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிதடா சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா