Nila Kaaigiradhu

Nila Kaaigiradhu

Hariharan

Альбом: Indira
Длительность: 4:14
Год: 1993
Скачать MP3

Текст песни

ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்
ஆஆ … ஆஅ.. ஆஅ
ஆஆ … ஆஅ.. ஆஅ
ஆஆ… ஆ …ஆஅ…ஆஅ

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்

தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்த  கைகள் மட்டும்
உன்னை தீண்டும்

காற்று வீசும் வெய்யில்
காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆ..வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே
என்றென்றும் வானில்

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்

அதோ போகின்றது
கானல் மேகம்
மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது
குயிலின் சோகம்
இசையும் கேட்கவில்லையே

இந்த பூமியே பூவனம்
எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்க்கையே சீதனம்
அதில் ஜீவனே போவதேன்

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்

தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்த  கைகள் மட்டும்
உன்னை தீண்டும்

காற்று வீசும் வெய்யில்
காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆ..வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்