Yaar Indha Saalai Oram

Yaar Indha Saalai Oram

G.V. Prakash Kumar

Длительность: 5:16
Год: 2013
Скачать MP3

Текст песни

யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றிலே
எங்கெங்கும் வாசம் வீசுது

யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி
நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே

யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றிலே
எங்கெங்கும் வாசம் வீசுது

தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில்
தள்ளி நிற்கலாம்

என்னை நானும்
உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம்
என்று கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் என்று ஏதாகிறேன்
எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது
இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே

யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது

மண்ணில் ஓடும்
நதிகள் தோன்றும் மழையிலே
அது மழையை விட்டு ஓடி
வந்து சேரும் கடலிலே

வைரம் போல பெண்ணின்
மனது உலகிலே அது தோன்றும்
வரையில் புதைந்து கிடக்கும்
என்றும் மண்ணிலே

கண்ஜாடையில்
உன்னை அறிந்தேனடி
என் பாதையில்
இன்று உன் காலடி
நேற்று நான் பாா்ப்பதும்
இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம்
எதிா் பாா்ப்பதும் ஏனடி

யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றிலே
எங்கெங்கும் வாசம் வீசுது
யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி
நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே
எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே
தாராரரரா ரரராரா...நானானன்னானே