Theriyaama Parthuputen
Ranjith, Sujatha, & Chorus
4:16களவானியே களவானியே நெஞ்சை திருடும் களவானியே கருவாச்சியே கருவாச்சியே உசுர எடுக்கும் கருவாச்சியே சின்னமனூர் சேல கிட்ட வருமா தென் மதுர காத்து முத்தம் தருமா கோடாலி கண்ணால் என்ன கண்டம் துண்டமா பொளந்த ஊடால பாத்து என்ன கொஞ்சம் கொஞ்சமா அளந்த களவானியே களவானியே நெஞ்சை திருடும் களவானியே அங்கயும் இங்கயும் ஆத்தில் மீன் ஆடுது மாமனே வருவியா சேல போராடுது காத்துல அசையிர சோள கொள்ளையில நான் பாப்பேனா பறிப்பேனா நெஞ்சம் வேனாங்குது உசுருக்குள்ள நீதான் ஓடி ஒளிஞ்ச வரப்புகள தாண்டி நீயும் வெளஞ்ச யார் என்ன சொன்னாலும் நீதான் என் ஜாமி நீ இன்றி நான் இல்ல இதுதான் என் ஜேதி களவானியே களவானியே நெஞ்சை திருடும் களவானியே உதட்டுல குடித்தனம் நடத்த நீ வாரியா என் அழகுக்கு உன்னையே எழுதி நீ தாறியா காலயே சுத்துற பூனையா இருக்கட்டா என் ஆயுசு முழுசையும் எழுதியே குடுக்கட்ட ம்ம்ம் ஓடத்தண்ணி எல்லாம் உப்பு கரிக்கும் எச்சி தண்ணி மட்டும் இனிப்பு எடுக்கும் நா இன்று நீயாக மாறிப்போனேனே நீ போன மண் அள்ளி பொட்டு வச்சேனே கருவாச்சியே கருவாச்சியே உசுர எடுக்கும் கருவாச்சியே சின்னமனூர் சேல கிட்ட வருமா தென் மதுர காத்து முத்தம் தருமா கோடாலி கண்ணால் என்ன கண்டம் துண்டமா பொளந்த ஊடால பாத்து என்ன கொஞ்சம் கொஞ்சமா அளந்த களவானியே களவானியே நெஞ்சை திருடும் களவானியே