Kosty
Ratty Adhiththan, King Mohan, & Anjali Kanthan
4:39வாழ்வா சாவா மதம் பிடித்து நீயா நானா கரம் பிடித்தவன் காடா மேடா கானல் நீரா கண்ணுக்குள் கரை போனது அன்புள்ள காதலி அலை மோதும் என்னம் கடல் போன்றது ஆலைக்குள் அகப்பட்டவன் என் வாழ்க்கை நிழல் ஆடுது மதம் படித்தது நிலை மறக்காமல் உனக்கு நானும் எழுதினேன் கனி இதழ்களும் கயல் விழிகளும் கசந்திருக்கவே நடக்கிறேன் நான் இதுவரை நான் நடந்த பாதை இன்பங்கள் விதைத்த மேடை இருப்பது நினைவு மட்டும் உனை விட்டு பிரிந்து செல்வேன் கடந்த காலமும் மறைந்த வானமும் உனக்கும் எனக்கும் உரைத்த பாடம் ஏராளம். என்னை வருத்தி உன்னைக் கவர்ந்த காதல் இனி போதும், சுயத்தை மறந்து நிஜத்தை தொலைத்த நிறங்கள் இனி சாகும். ஆதித்தன் நான்; தனிமையைத் தாயாக்கி இரவினை வீடாக்கி கவிதை எனும் கோட்டையிலே கர்ஜிப்பவன் நான். கனவுகளில் மட்டும் வாழ்ந்து விட்டேன். கற்பனைகளை மட்டுமே காதலித்தேன். இருந்தாலும் உன் நினைவுகள் பசுமரதானி போல என்றென்றும் என் மனதுக்குள் புதைந்து கிடக்கின்றன.