Notice: file_put_contents(): Write of 629 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Sheezay - Forever | Скачать MP3 бесплатно
Forever

Forever

Sheezay

Длительность: 4:54
Год: 2013
Скачать MP3

Текст песни

உயிரே தினம் கனவுகள் மறைய
இறந்தேன் உனக்காக
மனதில் தினம் வலியினை சுமந்தேன்
எதற்காக?

உயிரே தினம் கனவுகள் மறைய
இறந்தேன் உனக்காக
மனதில் தினம் வலியினை சுமந்தேன்
எதற்காக?

ஆ... கரை வந்து சேராமல் படகொன்று மூழ்கியதே
உயிர் இழந்த உருவம் இன்று பிணமாய் அலைகிறதே
நான் பாசம் தந்தேன், நீ ஏனோ மோசம் செய்தாய்
நான் உண்மை என்றேன், நீ ஏனோ பொய்யாய் ஆனாய்
நெஞ்சுக்குள் பூக்கும் பூவே வேரோடு எனை சாய்க்காதே
நேரத்தின் விளையாட்டில் எனை பகடைக்காயாய் மாற்றாதே
கவிதைகள் உனக்காக வரைந்தேன் பலகோடி
என் காதல் வெறும் கனவாய் ஆனது சரிதான் போடி

வேண்டாம் உந்தன் எண்ணம்
இருந்தால் சேரும் துன்பம்
உன் ஞாபகம் என்னைக் கொல்லும்
அது உயிரைத் திண்ணும் பிண்டம்

ஆ, உறக்கம் இழந்து இரத்தம் கசிந்து
உயிரைப் பிழிந்து எடுத்தவளே
மனிதாபம் இன்றி காதலை இங்கு
கசக்கி குப்பையில் எறிந்தவளே
விடை பெறும் நேரம் பெண்ணே
தடை ஒன்றும் இல்லை செல்லடி முன்னே
சாபம் கொண்டவன் இவனே
முற்றுப் புள்ளி வைப்பவன் இவனே

இனி நீ வேண்டாம் வேண்டாம்
எனை விட்டு போ போ
போ போ போ
போ போ போ

உயிரே தினம் கனவுகள் மறைய
இறந்தேன் உனக்காக
மனதில் தினம் வலியினை சுமந்தேன்
எதற்காக?

உயிரே தினம் கனவுகள் மறைய
இறந்தேன் உனக்காக
மனதில் தினம் வலியினை சுமந்தேன்
எதற்காக?

இது கனவா? இது நினைவா?
என்னை கிள்ளிப் பார்த்தேன் நான் இங்கு
எனைவிட்டு தூரம் சென்றது நினைவுகளோடு நீ இன்று
விடியாத இரவுகளாய், விடிந்தாலும் இருள் நிலவாய்
என் கண் உறங்கும் போதும்
கனவில் தினமும் பெண்ணே நீ வருவாய்
நீயாக எடுத்துக்கொண்ட இதயத்தை
நீயாக உடைத்தாய்
ஆறடி ஆழம் குழி ஒன்றைத் தோன்றி
உள்ளே தள்ளி விட்டாய் ஏன்?

ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
கேள்விக்கு பதில் எங்கே?
உன் காதல் பொய்யாய் மாறி
முள்ளாய் மனதை குத்துதே
உனக்காக எழுதும் இந்த புறநானூறின்
அகம் அறிவாயா?
உனை மட்டும் தேடும் எந்தன்
அகமதில் புறமெது நீ உணர்வாயா?

நீர் இன்றி மீனா? நீயின்றி நானா?
என் கண்ணில் கண்ணீர் போகுதே வீணா
உன்னால் ஒரு பெண்ணால் தன்னால்
வினை அதைத் தேடிக்கொண்டேன்
கனவது கலைய மனதுடைந்து
நிம்மதி நான் இழந்தேன்

போ போ போ போ
எனை விட்டுப் போ போ
எனை விட்டுப் போ போ
போ போ போ போ

நானாக தூங்கும்
அந்தக் காலம் இனி என்று?
நீ வந்த நேரம்
நான் உறங்கவில்லை இன்று
ஏன் என்று கேட்க கண்ணோடு பார்க்க
நீ இங்கு இல்லை யாரோடு கேட்க

நிஜமான நேசம் காண நான் உன்னை தேடினேன்
நீளமான பாசம் கொண்டு நான் உன்னை நாடினேன்
இந்த மயக்கத்தில் தான் என
விடை சொல்லடி பெண்ணே

உயிரே தினம் கனவுகள் மறைய
இறந்தேன் உனக்காக
மனதில் தினம் வலியினை சுமந்தேன்
எதற்காக?

உயிரே தினம் கனவுகள் மறைய
இறந்தேன் உனக்காக
மனதில் தினம் வலியினை சுமந்தேன்
எதற்காக?