Nee Kaatru Naan Maram (Solo)

Nee Kaatru Naan Maram (Solo)

Vidyasagar, Vairamuthu, & Hariharan

Длительность: 5:11
Год: 1998
Скачать MP3

Текст песни

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ அலை நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்

நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த் தொட அனுமதிப்பேன்

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்

நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்