Madana Mana Mohini
B. Ajaneesh Loknath
3:41B. Ajaneesh Loknath, Madhan Karky, K. S. Harisankar, And Chinmayi
தீம், தனன தீம், தீம், தனன தீம் தீம், தனன தீம், தீம், தனன தீம் ததரே-தரே தானி ததரே-ததரே-ததரே தானி வேங்குழலில் இழைந்தாயடி என் காதையே மென் மயங்கிக்கிடந்தேனடி என் போதையே வேலென்றருத்திடும் விழிகள் இரண்டில் நீ தாக்கினாய் உந்தன் மார்பை இறுக்கிடும் துணியால் எனை நீ கைதாக்கினாய் உலகே பொய்யடி கனவே மெய்யடி அதில் வாழ்வோமா பூங்கோதையே, ஓ தீயென்றெரியும் காடொன்றில் கீச்சா கிளிகள் உறவாட நீண்டே விரியும் விசும்பென்றே தீண்டா ஏக்கம் விரிந்தாட வேங்குழலில் இழைந்தாயடி என் காதையே மென் மயங்கிக்கிடந்தேனடி என் போதையே துரும்பென இளைத்திவள் உருமாற விருந்தாக எனை பரிமாற கருங்கனிச் சுவை இதில் உயிரூற துறந்தேனே நாணம் வெறியேற நீ இன்னும்-இன்னும்-இன்னும்-இன்னும் வேண்டுமே என எனதிதழ் உனதுடல் தீண்டுமே ஹே உனை இடை அணியெத பூண்டுமே நீ இறங்கிட இருதயம் தூண்டுமே இறங்காதேறேனோ உயிராய் மாறேனோ வலி தாங்காயோ பூங்கோதையே, ஓ தீயென்றெரியும் காடொன்றில் கீச்சா கிளிகள் உறவாட நீண்டே விரியும் விசும்பென்றே தீண்டா ஏக்கம் விரிந்தாட வேலென்றருத்திடும் விழிகள் இரண்டில் நீ தாக்கினாய் உந்தன் மார்பை இறுக்கிடும் துணியால் எனை நீ கைதாக்கினாய் உலகே பொய்யடி கனவே மெய்யடி அதில் வாழ்வோமா பூங்கோதையே, ஓ