Mirutha Mirutha
D. Imman, Shreya Ghoshal, Vijay Yesudas, And Madhan Karky
4:08மிருதா மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா மிருதா மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா இவள் கண்களின் முன்னே சிதைவாயா மிருதா நான் மனிதன் அல்ல கொல்லும் மிருகம் அல்ல இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று நான் நிஜமும் அல்ல நீ கனவும் அல்ல இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று மிருதா மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா மிருதா மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா நான் அழுகை அல்ல நீ சிரிப்பும் அல்ல இரண்டுக்கும் இடையில் கதறல் இது நான் சிலையும் அல்ல நீ உளியும் அல்ல இரண்டுக்கும் இடையில் சிதறல் இது நான் முடிவும் அல்ல நீ தொடக்கம் அல்ல இரண்டுக்கும் இடையில் பயணம் இது நான் இருளும் அல்ல நீ ஒளியும் அல்ல இரண்டுக்கும் இடையில் விடியல் இது தொலைவில் அன்று பார்த்த கனமா அருகில் இன்று நேரும் ரணமா கொல்லாமல் நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய் வாய்விட்டு அதைக் கூறாயோ சொல்லாமல் என்னைவிட்டு நீயும் போனால் என்னாவேன் என்று பாராயோ சில மேகங்கள் பொழியாமலே கடந்தேவிடும் உன் வானிலே எந்தன் நெஞ்சமும் ஒரு மேகமே அதை சிந்தும் முன்னே வானும் தீர்ந்ததே மிருதா மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா மிருதா மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா இவள் கண்களின் முன்னே சிதைவாயா மிருதா நான் மனிதன் அல்ல கொல்லும் மிருகம் அல்ல இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று நான் நிஜமும் அல்ல நீ கனவும் அல்ல இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று