Kaattu Payale (From "Soorarai Pottru")

Kaattu Payale (From "Soorarai Pottru")

G.V. Prakash Kumar, Dhee, & Snehan

Длительность: 4:06
Год: 2020
Скачать MP3

Текст песни

லல்லாஹி லைரே-லைரே
லல்லாஹி லைரே-லைரே
லல்லாஹி லைரே-லைரே, லை
லல்லாஹி லைரே-லைரே

காட்டு பயலே, கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ

கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுக்குறடா நீ
திருட்டு பூன போல என்ன உருட்டி-உருட்டி பார்த்து
சுரட்ட பாம்பா ஆக்கிபுட்ட நீ

என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னனமோ செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சு போல ஆக்கிபுட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ

யான பசி
நான் உனக்கு யான பசி
சோள பொரி
நீ எனக்கு சோள பொரி

லல்லாஹி லைரே-லைரே, லை
லல்லாஹி லைரே-லைரே
லல்லாஹி லைரே-லைரே, லை
லல்லாஹி லைரே-லைரே

பாசத்தால என்ன நீயும் பதற வெக்குற
பத்திகிட்டு எரியும் என்ன பாத்து நிக்குற
ஜிகுருதண்டா பார்வையால குளிர வெக்குற
தூர நின்னே என் மனச மேய வெக்குற

நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள வெக்கம் கெட்டு நிக்குறேன்
உச்சி கொட்ட வெக்குறியே வாடா (ஓய்)
நீ எச்சி ஊற வெக்குற என் உடம்ப தெக்குற
எதுக்கு தள்ளி நிக்குற வாடா (ஓய்)

நான் சாமத்துல முழிக்கிறேன் சார பாம்பா நெளியிறேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா
உன் மொரட்டு ஆச எனக்குதான் அதுவும் தெரியும் உனக்குதான்

என்ன செய்ய உன்ன
தின்னு தீக்க போறேன்
கொஞ்ச கொஞ்சமாக
கொஞ்சி கொல்ல போறேன்

வீச்சருவா இல்லாமலே வெட்டி சாய்க்குற (ஓய்)
வேலு கம்பு வார்த்தையால குத்தி கிழிக்கிற (ஓய்)
சூதானமா அங்க-இங்க கிள்ளி வைக்குற
சூசகமா ஆசையெல்லாம் சொல்லி வெக்குற

நீ தொட்டு பேசு சீக்கரம் விட்டுபோகும் என் ஜொரம்
வெட்டி கத பேச வேணாம் வாடா
நான் ஓல பாய விரிக்கிறேன் உனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டு போடா

நீ எதுக்கு தயங்கி நிக்குற என்ன ஒதுக்கி வைக்குற
சும்மா மொரண்டு புடிக்குற கட்டி அள்ளுடா
உன் மொரட்டு திமிரு எனக்குதான் அதுவும் தெரியும் உனக்குதான்

பொத்தி வெச்ச ஆச
பொங்குதடா ஒலையா
பொத்துக்கிட்டு ஊத்த
போகுதடா மழையா

லல்லாஹி லைரே-லைரே, லை
லல்லாஹி லைரே-லைரே
லல்லாஹி லைரே-லைரே, லை
லல்லாஹி லைரே-லைரே