Idhuvum Kadandhu Pogum (Reprise)

Idhuvum Kadandhu Pogum (Reprise)

Girishh G

Длительность: 3:09
Год: 2021
Скачать MP3

Текст песни

ஹம்ம்..ஹம்ம்..ஹம்ம்

போகும் பாதைகளும் வாழ்வின் தேவைகளும்
படிப்பினை கொடுத்திடுமே
முடியாத கேள்விகளும் ஆழ தேடல்களும்
வழிகளை அமைத்திடுமே

மழை காற்றோடு ஓடி சென்று நிலம் சேருமே(நிலம் சேருமே)
அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே(உயிர் வாழுமே)

சுடரி சுடரி வலிகள் நீதானே
ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே
விளக்கால் மலர் தான் அடி பூக்காதே
கிழக்காய் இருந்தால் இருள் சேராதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

உன்னை நீ ரசித்தால்
முழுதாய் வசித்தால்
இதம் தான் இந்த தனிமையே
துயரில் சிரித்தால் இடரை எரித்தால்
கணமும் ஒரு முழுமையே

சோகத்தால் எது தான் மாறிடும்
கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும்
என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்

தினம் நீ தேடும் வாழ்க்கை
எங்கோ உன்னை தேடுமே
அது உனக்கான காலம் வந்தால்
உன்னை சேருமே

சுடரி சுடரி முரண்கள் மாறாதே
மனம் தான் தெளிந்தால் மயக்கம் நேராதே
அழகே சுடரி அடி ஏங்காதே
பரிவின் தினவை வலி தாங்காதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

கடந்து போகும்
கடந்து போகும்
கடந்து போகும்
கடந்து போகும்
கடந்து போகும்
கடந்து…போகும்