Ennai Thaalattum (Duet)

Ennai Thaalattum (Duet)

Sirpy, Unni Menon, & Sujatha

Длительность: 4:47
Год: 2002
Скачать MP3

Текст песни

ஆஆ ஆஆ ஆஆ ஆ
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

உன்னை மழை என்பதா
இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா
உன்னை நான் என்பதா

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

நதியாக நீயும்
இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும்
நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில்
விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்க்கயிலே
வனமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

நான நானன நனனநான நனனநான நனனநான

பூலோகம் ஓர் நாள்
காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர் நாள்
விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன்
வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய்
பேசும் ஓவியமாய்

தீபம் நீயென்றால்
அதில் நானே திரி ஆகிறேன்
தினம் திரியாகிறேன்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

உன்னை மழை என்பதா
இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா
உன்னை நான் என்பதா

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா