Sil Sil Sillalla

Sil Sil Sillalla

Sirpy, Unnikrishnan, & Sujatha

Длительность: 4:22
Год: 2002
Скачать MP3

Текст песни

சில் சில் சில் சில்லல்லா
சில் சில் சில் சில்லல்லா

சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா

நீ காதல் ஏவாளா
உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா
பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

நீயிருக்கும் நாளில் எல்லாம்
இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில்
என் மீது இமயம் இருக்கும்

அகிம்சயாய் அருகில் வந்து
வன்முறையில் இறங்குகிறாய்

சிற்பமே என்னடி மாயம்
சிற்பியை செதுக்குகிறாய்

ஒரு சுவாசம் போதுமே
நாமும் வாழலாம்

சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா

சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

யா ஓயா ஓசா (யாயி யாயி யாயி யாயிஹா)

காதல் ஒரு ஞாபக மறதி
என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய்
மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

உன்னைப் போல் கவிதை சொன்னால்
உலகமே தலையாட்டும்

நம்மைப் போல் காதலர் பார்த்தால்
தாஜ்மகால் கைதட்டும்

காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே

சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா

சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

நீ காதல் ஏவாளா
உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா
பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நான் மின்னலா

சில் சில் சில் சில்லல்லா
சொல் சொல் நீ மின்னலா