Poo Vaasam
Vidyasagar, Vijay Prakash, & Sadhana Sargam
4:28உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா (ஆஆஆ) நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா (ஆஆஆ) நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா (ம்ம்ம்) நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா (ஆஆஆ) நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா (ஆஆஆ) நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா (ஆஆஆ) நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா (ஆஆஆ) நான் இதயம் என்றால் நீ உயிரா துடி துடிப்பா (ஆஆஆ) உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா நீ விதைகள் என்றால் நான் வேரா விளைநிலமா (ஆஆஆ) நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா (ஆஆஆ) நீ கைதி என்றால் நான் சிறையா தண்டனையா (ஆஆஆ) நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா (ஆஆஆ) நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா நீ நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா நீ திரும்பி நின்றால் நான் நிற்கவா போய்விடவா (ஆஆஆ) நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா (ஆஆஆ) நீ காதல் என்றால் நான் சரியா தவறா உன் வலது கையில் பத்து விரல் (பத்து விரல்) என் இடது கையில் பத்து விரல் (பத்து விரல்) தூரத்து மேகம் தூறல்கள் சிந்த தீர்த்த மழையில் தீ குளிப்போம்