Nee Yenadharuginil Nee

Nee Yenadharuginil Nee

Vishal Chandrashekhar

Длительность: 2:42
Год: 2021
Скачать MP3

Текст песни

நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு கவிதையே கிடையாதே
நீ எனதுயிரினில் நீ
இதை விட ஒரு புனிதமும் இருக்காதே

காற்றில் பூ போல நெஞ்சம் கூத்தாடுதே
கண்கள் பாக்காத வெக்கம் பந்தாடுதே
இது வரை தீண்டாத
ஓர் இன்பம் கை நீட்டுதே

கனவா நிஜமா
இது இரண்டும் தானா
விடை அறிகின்ற தேடல்கள் தேவை தானா
வெயிலா மழையா இது வானவில்லா
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா

காதல் பாடிடும் பாடல்
நெஞ்சோரம் கேக்கின்றதே
அடடா ஒரு வித மயக்கம்
கண்ணோரம் பூக்கின்றதே

போகாதது சாகாதது
உன்னோடு என் யோசனை
ஓ ஹோ மூழாதது வாளானது
என்னோடு உன் வாசனை
இதுவரை உணராத உறவொன்று உறவானது

கனவா நிஜமா
இது இரண்டும் தானா
விடை அறிகின்ற தேடல்கள் தேவை தானா
வெயிலா மழையா இது வானவில்லா
இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா