Yembuttu Irukkuthu Aasai
D. Imman, Sean Roldan, Kalyani Nair, And Yugabharathi
4:30நிதா-நிதா, நிதானமாக யோசித்தாலும் நில்லா-நில்லா, நில்லாமல் ஓடி யோசித்தாலும் நீதான் மனம் தேடும் மான்பாலன் பூவாய் எனை ஏந்தும் பூபாலன் என் மடியின் மணவாளன் எனத் தோன்றுதே செந்தூரா ஆ, சேர்ந்தே செல்வோம் செந்தூரா ஆ, செங்காந்தழ் பூ உன் தேரா ஆ மாரன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா? செந்தூரா ஆ, சேர்ந்தே செல்வோம் செந்தூரா ஆ, செங்காந்தழ் பூ உன் தேரா ஆ மாரன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா? நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும் விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும் காலை எழும்போது நீ வேண்டும் தூக்கம் வரும்போதும் தோள் வேண்டும் நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும் செந்தூரா ஆ, சேர்ந்தே செல்வோம் செந்தூரா ஆ, செங்காந்தழ் பூ உன் தேரா ஆ மாரன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா? செந்தூரா மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா? மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா? பாடல் கேட்போமா? ஆடி பார்ப்போமா? மூழ்கத்தான் வேண்டாமா? யாரும் காணாதா இன்பம் எல்லாமே கையில் வந்தே விழுமா? நீயின்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா? செந்தூரா ஆ, சேர்ந்தே செல்வோம் செந்தூரா ஆ, செங்காந்தழ் பூ உன் தேரா ஆ மாரன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா? செந்தூரா அலைந்து நான் களைத்து போகும்போது அள்ளி மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி வீட்டில் நளபாகம் செய்வாயா? பொய்யாய் சில நேரம் வைவாயா? நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா? செந்தூரா ஆ, சேர்ந்தே செல்வோம் செந்தூரா ஆ, செங்காந்தழ் பூ உன் தேரா ஆ மாரன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா? எய்தாயா? ஆ, கண்கள் சொக்க செய்தாயா ஆ கையில் சாய சொல்வாயா? ஆ ஏதோ ஆச்சு வெப்பம் மூச்சில் வெட்கங்கள் போயே போச்சு