Iravaaga Nee

Iravaaga Nee

G.V. Prakash Kumar

Длительность: 5:50
Год: 2015
Скачать MP3

Текст песни

இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா

தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி

கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே

ஓ நுறையாகி நெஞ்சம் துடிக்க
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிறே
காதோரம் காதல் உரைக்க

ஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க
என்னுயிறே மறு பார்வை போதும் பிறக்க

இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா

தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி

ஆஆ...ஆஆ...ஆஆ..ஆ

விழி தொட்டதா
விரல் தொட்டதா
எனதாண்மை தீண்டி பெண்மை
பூ பூத்ததா

அனல் சுட்டதா
குளிர் விட்டதா
அடடா என் நாணம் இன்று
விடை பெற்றதா

நீ நான் மட்டும்
வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும்
இடம் போதுமே

உன் பேர் சொல்லி
சிலிர்க்கின்ற இன்பம் போதும்
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்
ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என் உயிரே
காதோரம் காதல் உரைக்க

மழை என்பதா
வெயில் என்பதா
பெண்ணே உன் பேரன்பே நான்
புயல் என்பதா

மெய் என்பதா
பொய் என்பதா
மெய்யான பொய் தான் இங்கே
மெய் ஆனதா

அடியே பெண்ணே
அறியாத பிள்ளை நானே
தாய் போல் என்னை
நீ தாங்க வா

மடி மேல் அன்பே
பொன் ஊஞ்சல் நானும் செய்தே
தாலாட்ட உன்னை அழைப்பேன்

ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என் உயிரே
காதோரம் காதல் உரைக்க

இரவாக நீ இரவாக நீ
நிலவாக நான் நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா